Saturday, June 5, 2010

பதிவர்கள் சந்திப்பும் சில காமெடியும்..






















Monday, April 26, 2010

குசும்பன் புகழ் ஓங்குக..!



உலக அளவில் பிரபரமான அண்ணன் குசும்பனார் டிவியில் தோன்றியபோது.. மோகித்த இளம்பெண். :)



ஹாலிவுட் நடிகையானாலும்.. தலைவனின் படத்தில் தூசு படாமல் தட்டித்தான் ஆகணும்.



மார்கெட்டில் போய் காய்கறி வாங்கி வந்தோமா.. சமைச்சோமான்னு இல்லாம என்ன வேடிக்கை.. ஓ.. குசும்பனாரோட அழகை ரசிக்கிறியா.. ஓகே..ஓகே..!


தொடர்ச்சியாக அண்ணன் குசும்பனாரின் வலைபதிவை படித்து வ்ரும் நடிகர் கமல்ஹாசன், சென்னை வருந்திருந்த போது குசும்பனாரை பாராட்டியபோது எடுத்தபடமாம்.






வேட்டைக்காரன் படத்தில் விஜய் மட்டும் தான் நடிக்க வேண்டுமா? எங்கள் குசும்பனார் நடிக்கக்கூடாதா?

எப்படி இருக்கு படம் என்பதை தெரிவித்தால் மொக்கை மோகனின் பணி தொடரும்...

(இது போல கிராபிக்ஸில் உங்கள் படமும் வரவேண்டும் என்றால்.. குசும்பன் அனுப்பியது மாதிரி எனக்கு கிராபிக்ஸ் செய்து அனுப்புங்கள் நான் பதிவு போடுகிறேன்.)

test

test..test..test..test..test..test..test..test..test..

Sunday, July 5, 2009

தமிழக எழுத்தாளர்கள் ஈழத்தமிழர்களுக்கு செய்தது என்ன?- மனுஷ்ய புத்திரன்

இன்று காலை கணினியை திறந்ததும் முத்துக்கிருஷ்ணன் சாட்டில் வந்து இதைப் படிங்க முதல்ல என்று இரண்டு இணைப்புகளை தந்தார். அது கவிஞர் தேவேந்திரபூபதியின் கடவு இலக்கிய அமைப்பு சார்பாக மதுரையில் சமீபத்தில் நடந்த ஒரு இலக்கிய கருத்தரங்கு பற்றி கவிஞர் தமிழ்நதி தனது வலைப்பூவில் எழுதிய இரண்டு பதிவுகள்.

http://tamilnathy.blogspot.com/

http://tamilnathy.blogspot.com/2009/06/blog-post_29.html

கூட்டத்தில் தமிழ்நாட்டு படைப்பாளிகள் ஈழப்பிரச்சினையில் அக்கறையற்று இருக்கிறார்கள் என்ற தமிழ்நதியின் குற்றச்சாட்டை ஒட்டி எழுந்த விவாதத்தை விரிவாகப் பதிவு செய்திருந்தார். தமிழ்நதியின் மீது எனக்குள்ள அன்பிற்கும் மதிப்பிற்கும் முக்கியமான காரணங்களில் ஒன்று கடும் அரசியல் வேறுபாடுகளைப் பற்றி பேசும் சமயத்தில்கூட தனது இலக்கியம் சார்ந்த விருப்புகளை விட்டுக் கொடுத்ததில்லை என்பதுதான். இது தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம் அதுவும் இளம் எழுத்தாளர்களிடம் காணக்கிடைக்காத ஒரு குணம். அரசியல் வேற்றுமைகளுக்காக தனது முன்னோடியான எழுத்தாளர்களை அவர் அவமானப்படுத்த ஒருபோதும் துணிந்ததில்லை. ஈழப்பிரச்சினை தொடர்பாக அவர் தமிழ்நாட்டுப் படைப்பாளிகள்மேல் வைத்திருக்கும் குற்றச்சாட்டு தொடர்பான சில திருத்தங்களை முன்வைப்பதே இந்தப் பதிவின் நோக்கம். எவ்வளவு சிரமங்களுக்கு இடையே தேவேந்திரபூபதி இதுபோன்ற கூட்டங்களை நடத்திவருகிறார் என்ற பிரச்சினைக்கு பிறகு வருகிறேன்.

பொதுவாக பெரும்பாலான தமிழ் நாட்டு எழுத்தாளர்கள் சமூக அரசியல் பிரச்சினைகளில் அக்கறையற்றவர்கள். அப்படி அரசியல்ரீதியான அக்கறை கொண்ட எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் இலக்கிய ஈடுபாடு இல்லாதவர்கள். ''இலக்கிய ஈடுபாடு இல்லாமல் எப்படி எழுத்தாளராக...'' என்றெல்லாம் கேட்காதீர்கள். உதாரணங்கள் சொன்னால் பெரிய வருத்தம் வந்து சேரும். இந்தி எதிர்ப்பு போராட்டம், நெருக்கடி நிலை, வெண்மணி படுகொலை, தமிழகத்தில் நடந்த மாபெரும் அரசியல்- அதிகார வன்முறைகள் பற்றியெல்லாம் நவீன எழுத்தாளர்கள் என்ன நினைத்தார்கள் என்பதற்கு பதிவுகள் இல்லை-அபூர்வமான சில விதிவிலக்குகள் தவிர. சாதாரணமாக தமிழ்பொதுமக்களுக்கு இருக்கக்கூடிய பொது விவகாரம் சார்ந்த அக்கறைகள் எதுவும் பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களுக்குக் கிடையாது என்பதே உண்மை. அவர்கள் தீவிரமாக எதிர்வினையாற்றக்கூடிய ஒரு விஷயம் அவர்களது சக எழுத்தாளர்கள் மட்டுமே. எனினும் இதை நான் ஒரு குற்றச் சாட்டாக வைக்க மாட்டேன். அது ஒரு தனிமனித தேர்வு. அவ்வளவே. எழுத்தாளனின் குரலுக்கு எந்த சமூக மதிப்பும் இல்லாத ஒரு சமூகத்தில் அவன் பேசுவதும் பேசாமல் இருப்பதும் ஒன்றுதான். எந்த சமூக நெருக்கடி குறித்தும் ஒரு தமிழ் எழுத்தாளரோ கவிஞரோ என்ன கருதுகிறார் என்ற கேள்வி எனக்கு ஒருபோதும் எழுந்ததில்லை. அதுபோகட்டும், இதற்கெல்லாம் மாறாக பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக எதிர்வினையாற்றிய ஒரு அரசியல் சமூக நிகழ்வு இருக்குமெனில் அது இலங்கைத் தமிழர் பிரச்சினைதான்.



ஈழத்தமிழர் பிரச்சினை தொடர்பாக கடந்த ஓராண்டாக நடந்த ஆரவாரங்களெல்லாம் தொடங்குவதற்கு முன்பே கவிஞர்.கனிமொழி சென்னையில் படைப்பாளிகள் உண்ணாவிரதம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் ஞானக்கூத்தன், இன்குலாப் உட்பட பலதளங்களைச் சேர்ந்த படைப்பாளிகள் பங்கெடுத்தனர். பிறகு தமிழகப் படைப்பாளிகள் பலரும் இதற்கு தொடர்ச்சியாக தங்களது எதிர்வினையை ஆற்றி வந்திருக்கின்றனர். பல மாதங்களுக்கு முன்பு எஸ்.ராமகிருஷ்ணன் இலங்கைப் பிரச்சினையில் படைப்பாளிகளின் குரலை முன்னெடுக்கும்விதமாக மாபெரும் கூட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என்று என்னிடம் கூறினார். பிறகு யாரையெல்லாம் அதில் பேச செய்யவேண்டும் என்று ஒரு விரிவான பட்டியலை தயாரித்தோம். நான் அது தொடர்பாக எழுத்தாளர்களை தொடர்புகொண்டு பேச ஆரம்பித்தபோதுதான் தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் சார்பாக ஒரு பெரிய கூட்டம் ஏற்பாடு செய்வது தெரிந்தது. அது ஒரு போட்டி செயல்பாடாக மாறக் கூடாது என்பதற்காக நாங்கள் திட்டமிட்ட கூட்டத்தைத் தள்ளிவைத்தோம். அந்தக் கூட்டம் உண்மையில் பெரிய அளவில் நடந்தது. ஏராளமான கவிஞர்கள் கவிதைகள் வாசித்து தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். பிறகு கோணங்கி போன்ற சில முக்கியமான எழுத்தாளர்கள் உட்பட பல படைப்பாளிகள் தில்லிக்குச் சென்று பாராளுமன்றம் முன்பு இலங்கை பிரச்சினையில் இந்திய அரசின் நிலைப்பாட்டினை எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர்.

கடந்த ஓராண்டாக உயிரோசை இணைய இதழில் தமிழவன், இந்திரா பார்த்தசாரதி போன்ற படைப்பாளிகள் ஈழப் பிரச்சினையில் ஆற்றிய உணர்வுபூர்வமான எதிர்வினைகளை யாவரும் அறிவார்கள். எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணைய தளத்தில் தன்னுடைய உணர்வுகளை விரிவாக பதிவு செய்திருக்கிறார். இலங்கை பிரச்சினை தொடர்பாக, உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களில் வெளிவந்த கட்டுரைகள், தலையங்கங்களை அறிந்திருக்கக்கூடும். இதுபோல ஏராளமான உதாரணங்களைத் தொகுக்க முடியும். இவை எல்லாம் தமிழ் எழுத்தாளர்களின் பிரதிநிதித்துவ குரல்கள் இல்லையா? அதற்காக வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்டுவிட்டு ஒவ்வொருவரும் விரலில் அடையாள மை வைத்துக் கொள்வதுபோல எல்லா படைப்பாளிகளும் தங்கள் அக்கறையை வெளிப்படையாக முன்வைப்பது கட்டாயமா என்ன? எனக்கு இப்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

நான் காலச்சுவடு இதழில் ஒரு கடைநிலை ஊழியனாகப் பணிபுரிந்து வந்த காலத்தில் (ஆசிரியர் குழுவில் பணியாற்றினேன் என்று சொன்னால் அதன் இப்போதைய ஆசிரியரும் இப்போதைய கடைநிலை ஊழியர்களும் மிகுந்த பதட்டமடைவார்கள்.) குஜாராத் வன்முறைக்கு எதிராக காலச்சுவடு இதழ் சார்பாக சென்னையில் பல்வேறு செயல்பாடுகள் ஏற்பாடு செய்யபட்டன. அதை முன்னின்று ஒழுங்கு செய்துவந்தேன். இதற்காக நான் குடியிருந்த வீட்டை பின்னர் காலிசெய்ய வேண்டி வந்தது. அந்த நிகழ்வுகளில் ஒன்றாக அஸ்கர் அலி எஞ்ஜினீயரின் சொற்பொழிவு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தோம். கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது ம.க.இ.கவின் மருதையன் என்னை வழிமறித்தார். நானும் பழைய பாசத்தோடு புன்னகைத்தேன். அவர் நேரடியாக தாக்குதலில் இறங்கினார் '' நீங்கள் குஜராத் பிரச்சனைக்காக இத்தனை காரியம் செய்தாலும் ஒரு கவிதைகூட எழுதவில்லையே. அதனால் உங்கள் ஈடுபாட்டை நம்பமாட்டேன்" என்றார். மருதையன் அப்படிக் கேட்பதில் அவருக்கான நியாயங்கள் உணடு. புதிய கலாச்சாரத்தில் இந்திய தேசியத்தை எதிர்த்து ' உனது கொடியின் கீழ் ஒரு தேசபக்தனும் தலைவணங்க மாட்டான்' என்று கவிதை எழுதிய ஆள் ஏன் குஜராத் வன்முறை பற்றி கவிதை எழுதவில்லை என்று அவர் யோசிப்பது நியாயமே. அன்று அவரிடம் ' எனக்கு போஸ்டர் ஒட்டுவதும் கவிதை எழுதுவதும் ஒரேமாதிரியான ஈடுபாடுள்ள செயல்'தான் என்று பதில் கூறினேன். ஆனால் உண்மையான பதில் கவிதை எழுதுவதற்கான உத்தரவு கடவுளிடமிருந்து அப்போது எனக்கு வந்திருக்கவில்லை என்பதுதான்.

ஆகையால் படைப்பாளிகளின் அக்கறைகளை எளிமைப்படுத்துவது அவர்களை புரிந்துகொள்வதிலிருந்து விலகுவதான ஒரு செயல்பாடே. அது சரி தமிழ் நதி, நீங்கள் என்னை ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளனாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையா? வரலாறு என்னும் பைத்தியக்கார விடுதி எழுதி முடித்த இரவில் அதை நீங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பி உங்களுக்கு மின்னஞ்சல் செய்தேன். மறுநாள் காலையில் கண்ணீருடன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தீர்கள். அந்தக் கவிதை உருவாக்கிய உணர்வலைகளை நீங்களும் அறிவீர்கள். இதெல்லாம் இங்குதான் நடந்தன.

சில எழுத்தாளர்கள் மெளனமாக இருந்திருக்கலாம். சாருநிவேதிதா, ஜெயமோகன் போன்றவர்கள் வேறொரு தளத்தில் இருந்து எதிர்வினையாற்றியிருக்கலாம். இதெல்லாம் ஈழப் போராட்டத்தின் சிக்கலான அரசியல் எதார்த்தம் சார்ந்தவை. உணர்வுபூர்வமான நிலைப்பாடுகளைத் தாண்டி தீவிரமான கேள்விகளையும் விவாதங்களையும் உருவாக்குபவை. நீங்கள் அதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். புரிந்துகொள்ளவேண்டும். இந்திய, தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்மேல் காட்டுகிற வெறுப்பைப் போன்றதொரு வெறுப்பை நீங்கள் தமிழக எழுத்தாளர்கள்மேல் காட்ட நியாயமில்லை என்பதுதான் எதார்த்தம். மற்றபடி ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் காட்டும் இதுபோன்ற குதர்க்கமான எதிர்வினைகள் கேலிக்குரியவை.

இந்தப் பதிவில் இந்தக் கூட்டம்பற்றிய விரிவான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. படிக்க உற்சாகமாக இருந்தது. கவிஞர் தேவேந்திரபூபதி இதுபோன்ற கூட்டங்களை ஆர்வமுடன் நடத்திவருகிறார். இது இலக்கிய சூழலை உற்சாகப்படுத்தும் முக்கியமான செயல்பாடு. தேவேந்திரபூபதி கவிதைகள் எழுதத் தொடங்கும் முன்னரே எஸ்.ராமகிருஷ்ணனின் நண்பராக அறிமுகமானவர். ஒரு புரவலர். மதுரையில் வணிகவரி துறையில் ஒரு முக்கிய அதிகாரியாக இருப்பவர். கஷ்டப்படும் சிறு பத்திரிகை எழுத்தாளர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய முதல் கவிதைத் தொகுப்புபற்றி பேச ஒரு முறை இப்போது சுதீர் செந்தில் என வழங்கப்படும் நண்பர் செந்தில்குமார் அழைத்திருந்தார். நானும் அவரது கவிதைகள் பற்றிய என் கருத்துக்களை மையமான ஒரு மொழியில் முன்வைத்தேன். அதற்கு நன்றியுரை வழங்கிய பூபதி 'மனுஷ்ய புத்திரன் போன்ற ஒரு கவிஞரின் வாயால் என் கவிதைகள் உச்சரிக்கப்படுவதையே எனது வாழ்வின் பாக்கியமாகக் கருதுகிறேன்" என்றார். எனக்கு மிகவும் சங்கடமாகிவிட்டது. பூபதி மதுரை புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடப்பதில் முக்கிய பங்கு வகித்து வருபவர். அதன் காரணமாக மதுரை புத்தகக் கண்காட்சியில் அன்றாட நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான கான்ட்ராக்ட் தேவேந்திரபூபதிக்கு அதிகாரபூர்வமற்றவகையில் வழங்கப்பட்டிருக்கிறது. எல்லா நிகழ்ச்சிக்கும் அது பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, கிராமிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி. குறும்படமாக இருந்தாலும் சரி. கவியரங்கமாக இருந்தாலும் சரி தேவேந்திரபூபதிதான் தலைமை. ஒவ்வொரு நாளும் கண்காட்சியில் மைக்கில் 'கவி சக்கரவர்த்தி, கவிச்சுடர், கவி வேந்தன், கவிப்புயல்‘ என்றெல்லாம தேவேந்திரபூபதி வர்ணிக்கப்படுவதை கேட்கவே மிகவும் உற்சாகமாக இருக்கும். மு.க.அழகிரி இதைக் கேட்டால் மதுரையில் தனக்கு சவால்விடக்கூடிய ஒரே ஆள் தேவேந்திரபூபதி என்று நினைப்பார். (இதை நான் எந்த துர்நோக்கத்திலும் சொல்லவில்லை.)

அவர் இந்தக் கூட்டங்களை நடத்துவதற்காக படும் கஷ்டங்களுக்கு பிரதிபலனாக அவர் இத்தகைய அடைமொழிகளை சூடிக்கொள்வதை யாரும் தவறாகக் கருதவேண்டியதில்லை.

அவர் அடைந்த சில இன்னல்களை நானே நேரில் பார்த்திருக்கிறேன். ஒரு முறை புத்தகக் கண்காட்சியில் அகரம் பதிப்பகத்தில் ஒரு நூல் வெளியீட்டு விழா. சி.மோகன் நூலை வெளியிட சுகிர்தராணி பெற்றுக்கொண்டு உரையாற்றுவதாக ஏற்பாடு. சி.மோகன் வரவில்லை. அப்போது வேறு நிகழ்சிக்காக அங்கு வந்திருந்த எஸ்.ராமகிருஷ்ணனை நூலை வெளியிட பூபதி கேட்டுக்கொள்ள ராமகிருஷ்ணனும் சம்மதித்தார். நானும் நண்பர்கள் சிலரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தோம். கூட்டம் தொடங்கவே இல்லை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. சற்று நேரத்தில் ராமகிருஷ்ணனை மட்டும் அழைத்துக் கொண்டு பூபதி மேடையின் பின்புறம் போனார். சற்று நேரம் கழித்து ராமகிருஷ்ணன் பையை எடுத்துக்கொண்டு கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அவரது நண்பர்களும் வெளியேறினர். பிறகு யாரோ புத்தகத்தை வெளியிட்டார்கள். சுகிர்தராணி பரிபாஷையில் ஏதோ உரையாற்றினார். நான் என்ன நடந்தது என்று விசாரித்தேன். ராமகிருஷ்ணன் நூலை வெளியிட்டால் தான் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டேன் என்று சுகிர்தராணி தெரிவித்தாராம். அதனால் ராமகிருஷ்ணனை வெளியேறும்படி அன்பாக பூபதி கேட்டுக்கொள்ள ராமகிருஷ்ணன் கிளம்பிப்போனார். ராமகிருஷ்ணனுக்கு பதில் சுகிர்தராணியை ஏன் வெளியே போகச் சொல்லமுடியவில்லை என்பது எனக்குப் புரியவே இல்லை.

பிறகு ஒரு நாள் நான் பூபதியோடு குடித்துக்கொண்டிருந்தபோது ‘என்னைத் தவிர தமிழ்நாட்டில் உள்ள அத்தனை கவிஞர்களையும் ஒவ்வொரு ஆண்டும் கவிதை வாசிப்பிற்கு அழைக்கிறீர்களே அது ஏன்‘ என்று கேட்டுவிட்டேன். பூபதி மிகுந்த பிரியமும் நல்லிதயமும் கொண்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக எதிரிகளை சம்பாதித்துக்கொள்ளக்கூடாது என்று நினைப்பவர். சென்ற ஆண்டு மதுரை புத்தகக் கண்காட்சி சமயம் என்னை அழைத்தார். ‘இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சி கவிதை வாசிப்பிற்கு நீங்கள்தான் தலைமை தாங்க வேண்டும்‘ என்றார். எனக்கு திக்கென்று ஆகிவிட்டது. காதோரம் இப்போதுதான் இளநரை லேசாக எட்டிப் பார்க்கிறது. அதையும் பிடுங்கியோ சாயம்போட்டோ சாதுர்யமாக மறைத்து வருகிறேன். ஒரு கவிதை வாசிப்பிற்கு தலைமை தாங்கும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது? பெண்களிடையே எனக்கு இருக்கும் புகழை குலைக்கும் சதி என்று புரிந்து அவரிடம் மறுப்பு தெரிவித்தேன். உடனே எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பூபதியிடமிருந்து ஃபோன். ‘மனுஷ்ய புத்திரனிடம் நீங்கள் சொல்லுங்கள்‘ என்று. இதென்னடா வம்பா போச்சு என்று யோசிக்க ஆரம்பித்தேன். பின்னர் பூபதி அழைத்து ‘கலாப்ரியாவும் நீங்கள்தான் தலைமை தாங்கவேண்டும் என்று மிகவும் விரும்புகிறார்‘ என்றார். சரி நமது இலக்கிய வாழ்க்கைக்கு முடிவுகட்டும் இந்த சவாலை சந்திப்போம் என்று ஒத்துக்கொண்டேன். ‘நீங்கள் தலைமையேற்கும் கவியரங்கிற்கு நீங்கள் பரிந்துரைக்கும் கவிஞர்களையே அழைக்கலாம்‘ என்று கூறினார். ‘அதெல்லாம் வேண்டாம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்‘ என்றேன். ‘இரண்டு பெண்கவிஞர்களையாவது பரிந்துரையுங்கள்‘ என்றார் (இமேஜ்). நானும் 2-3 பேரின் பெயர்களைச் சொன்னேன். அதற்குப் பிறகு பூபதியிடமிருந்து தகவல் ஏதும் இல்லை. கண்காட்சி நெருங்கிவிட்டது. என் பயணத் திட்டத்தை நான் முடிவு செய்ய வேண்டும் தொலைபேசியில் அழைத்தால் எடுக்க மறுத்தார். பலமுறை முயற்சித்தபிறகு ஒரு கடுமையான குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே அழைத்தார். 'சுகிர்தராணி, வெண்ணிலா முதலான கவிஞர்கள் நீங்கள் தலைமையேற்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். அதனால் கவியரங்கம் நடத்துவதே பிரச்சினையாகி விடும் போலிருக்கிறது. இதனால் என்னுடைய கேரியருக்கே பிரச்சினை வந்துவிடும்போலிருக்கிறது' என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் பெண் கவிஞர்கள் சிலர் பூபதியை இவ்வளவு மிரட்டுகிறார்கள் என்று குழம்பிப் போனேன். ' கவியரங்கத்தை ரத்து செய்துவிடுகிறேன். அந்த தேதியில் நீங்கள் மட்டும் சிறப்புரை ஆற்றும்படி நிகழ்ச்சியை மாற்றிவிடலாம்'' என்றார். எனக்கோ சுகிர்தராணி இல்லாத ஒரு கூட்டத்தில் பேச எந்த ஆசையும் இல்லை. மறுத்துவிட்டேன். பிறகு நான் மதுரைக்குப் போனேன். கவிதை வாசிப்பும் நடந்தது. நான் பரிந்துரைத்த பெண்கவிஞர்கள் கவிதை வாசித்தார்கள். கூட்டத்தில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்த பூபதி பதட்டமாக அருகில் வந்து 'மேடைக்கு வருகிறீர்களா?' என்றார். அவர் என்னை கெளரவப்படுத்தவே விரும்பினார். ஆனால் மிகவும் அவமானமாக உணர்ந்தேன்.

இதில் குறிப்பிடவேண்டிய இரண்டு விஷயங்கள். வெண்ணிலா என்னிடம் நட்புணர்வுள்ளவர். உயிர்மை ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசியிருக்கிறார். சமீபத்தில் அப்பாஸ்-சி.மணி நினைவுக் கூட்டம் நடந்தபோது அந்த அமர்வை ஒருங்கிணைத்தவர் சுகிர்தராணி. என்னைக் கண்டதும் தர்ணா எதுவும் நடத்தவில்லை. பூபதியிடம் இருந்தது வேறு மனச்சிக்கல். இலக்கிய அரசியல் சார்ந்து அவரது நண்பர்கள் அவருக்கு கொடுக்கும் நெருக்கடிகளை அவர் சமாளித்தாக வேண்டும். இந்த நெருக்கடிகளுக்கு இடையேதான் அவர் இலக்கிய சேவை செய்யவேண்டும். இது குறிப்பிட்ட பிராந்தியம் சார்ந்து செயல்படும் யாருக்கும் வரக்கூடிய நெருக்கடியே. பூபதி போன்ற அரசு ஊழியர்கள் ஆர்வத்தில் கவிதை எழுத முயற்சிப்பதும் இலக்கிய கூட்டங்கள் நடத்துவதும் பிற அரசு ஊழியர்களும் பின்பற்றவேண்டிய உதாரணங்கள். மற்றபடி யவனிகா ஸ்ரீராம்தான் பூபதிக்கு கவிதைகள் எழுதிக் கொடுக்கிறார் என்ற வாதத்தை நான் ஒருபோதும் ஏற்கமாட்டேன். ஏனெனில் இருவரது கவிதைகளிலும் இருப்பது முற்றிலும் வேறுவிதமான கோளாறுகள். ஒரே ஆள் இரண்டுவிதமான கோளாறுகளுடன் நடமாடுவது உடல் உபாதைகளை பொறுத்தவரை சாத்தியம். கவிதையில் சாத்தியமல்ல.

உங்கள் கருத்துக்களை எழுத வேண்டிய முகவரி : manushyaputhiran@uyirmmai.com
------
நன்றி:- மனுஷ்யபுத்திரன் பக்கம்

Saturday, July 4, 2009

வித்தியாசமான படங்கள் சில











எஞாய் மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

படங்கள்

மொக்கை வணக்கம்

மொக்கை மோகனாகிய நான் சொல்லுவதெல்லாம்.. மொக்கை என்று சொல்லிவிட முடியாது. அதற்காக மொக்கை இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. எதோ சிலகாலம் வலைபதிவுகளை(வலைப்பூக்களை) பார்த்து(முகர்ந்து)வருகிறவன் என்பதால்.. நானுக் எழுத வந்துள்ளேன்.

அன்புடன்
மோகன்